Sunday, January 26, 2020

திண்டுக்கல் கொடைரோடு அருகே சினிமா பாணியில் விபத்து 5 பேர் பலி பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல்: லாரியை ஓவர் டேக் செய்ய போனார் காரில் வந்தவர்.. இதில் நிலைதடுமாறி சைக்கிளில் மோதி... சென்டர்மீடியத்தை உடைத்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த இன்னொரு காரில் போய் மோதிவிட்டார்.. இதில் மொத்தம் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன்.. இவர் ஒரு மளிகை வியாபாரி.. 58 வயதாகிறது.


மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர் செல்வமைந்தன், அவரது மனைவி ஜெயந்தால்மணி என 4 பேரையும் அழைத்து கொண்டு ஒரு கல்யாணத்துக்கு காரில் சென்றார்... சாத்தான்குளம் அருகே முதலூரில் கல்யாணம் நிகழ்வு.. காரை வெள்ளையன்தான் ஓட்டிச் சென்றார்.
இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் என்ற 26 வயது டாக்டர், தன்னுடைய பாட்டி பெரியம்மாளை அழைத்து கொண்டு காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொடைரோடு அருகே சடையாண்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் 2 கார்களும் எதிரெதிரே அசுர வேகத்தில் வந்தன...
இதில் பிரகதீஷ், முன்னால் லாரியை ஓவர் செய்ய முயன்றார்... அப்போது கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓவர் ஸ்பீடில் வந்த பிரகதீஷ் சைக்கிள் மீது மோதினார். பிறகு கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தறிகெட்டு ஓடி, நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனை உடைத்து கொண்டு.. இன்னொரு பக்கத்தில் பாய்ந்து, எதிரே வந்த வெள்ளையனின் கார் மீது பயங்கரமாக மோதியது.



கொடைரோடு டோல்கேட்டில் நடந்த இந்த விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி உள்ளது.. பிரகதீஷ் மேல்தான் முழு தவறும் உள்ளதாக தெரிகிறது.. முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்ய போய்தான்.... சைக்கிளில் வந்தவர் மீது மோதிய காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.. இதில் 5 பேரும் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.



No comments:

Post a Comment

கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி ! ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்...