Tuesday, January 28, 2020

கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி !
ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 36 கி.மீ,  சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனுகபட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்ருதி. அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.


மாணவி ஸ்ருதி கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல்,  சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதனைகளை செய்து வருகிறார்.


இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவி ஸ்ருதி 36 கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுசுபட்டி பகுதியில் உள்ள்ள அரசுப் பள்ளியில் இருந்து ஆரணி வந்தவாசி சாலை வரை கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டியவ, திரும்பவும் சைக்க்கிளில் வந்தார்.


மேலும் மாணவி ஸ்ருதி கண்ணைக் கட்டிக் கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Monday, January 27, 2020

தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் ஹிந்து மகாசபை அறிவிப்பு

அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என இந்து மகாசபை அறிவித்துள்ளது...




ஈரோட்டில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என அகில பாரத ஹிந்து மகாசபை தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில்் அவர் அளித்த பேட்டியில்,
நாயன்மார்கள் ஆழ்வார்கள் சித்தர்கள் முனிவர்கள் ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆல் போற்றி பாதுகாக்கப்பட்ட ஹிந்து மதத்தையும் தர்மம சாஸ்திரத்தை கொச்சை படுத்தியும் இழிவுபடுத்தியும் பேசுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க்க வேண்டும்.

ஆந்திராவில் இந்து மதத்தை இழிவாக பேச தடைை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர்் மீது கடுும் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ராமரை இழிவாக பேசி செருப்புு மாலை அணிவித்த பெரியார் பிறந்த ஈரோட்டில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் மார்ச் மாதத்தில் துவங்கும் எனவும் கூறினார்.

பிப்ரவரி 1 முதல் WhatsApp இயங்காதா? உண்மை என்ன!

பிப்ரவரி 1 முதல் சில மொபைல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மொபைல் போன்களும் வாட்ஸ்அப் ம் நகமும்்் சதையும் போல ஒன்றி விட்டது. சமீபத்தில் நடந்த சர்வேயில்் உலகில் அதிக நபர்களால்
அதிிக அளவில் பதிவிறக்கம்் செய்யப்படும் செயலியாக வாட்ஸ் அப் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அந்த அளவிற்கு வாட்ஸ்அப் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

குறுஞ்செய்திகள், வீடியோ கால்கள், வாய்ஸ்் கால்கள் உள்ளிட்ட முக்கிகிய சேவைகளை வழங்கி வருகிறது. போட்டோோ மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் பகிரவும் முக்கியமான செயலியாக அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்டுு வருகிறது.


இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு வெர்சன் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் வர்ஷன் களிலும் மற்றும் ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு முந்தைய ஐஓஎஸ் வர்ஷன் களிலும் வாட்ஸ்அப் இனி இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

#குடியரசு தின விழா தலைமை தாங்கிய பெண் கேப்டன் தான்யா

#குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய பெண் கேப்டன் தான்யா....

சிங்கப் பெண்ணே...

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாா அணிவகுப்பில் அனைத்து ஆண்கள் படை பிரிவிற்கும் தலைமை ஏற்றுு வழிநடத்திச் சென்றவர் கேப்டன்் தான்யா வயது 26.


இவரது தாத்தா தந்தை ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். நான்காவது தலைமுறையாக
 தான்யாவு ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை செய்துு வருகிறார்
இதுகுறித்துு தான்யா கூறுகையில் இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தையின் ராணுவ சீருடைகளை அணிந்து பார்ப்பேன்.ஆண்கள் படை பிரிவிற்கு தலைமை ஏற்று நடத்தியதை தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்ர.

கடந்த ஆண்டுுுு குடியரசு தின அணிவகுப்பில் பாவனா கஸ்தூரி என்ற பெண் அனைத்து ஆண்கள் படை பிரிவிற்கும் தலைமையேற்று நடத்திினா. இந்த ஆண்டு இந்தப் பெருமை தன்யா விற்கு கிடைத்துள்ளது

Sunday, January 26, 2020

திண்டுக்கல் கொடைரோடு அருகே சினிமா பாணியில் விபத்து 5 பேர் பலி பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல்: லாரியை ஓவர் டேக் செய்ய போனார் காரில் வந்தவர்.. இதில் நிலைதடுமாறி சைக்கிளில் மோதி... சென்டர்மீடியத்தை உடைத்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த இன்னொரு காரில் போய் மோதிவிட்டார்.. இதில் மொத்தம் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன்.. இவர் ஒரு மளிகை வியாபாரி.. 58 வயதாகிறது.


மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர் செல்வமைந்தன், அவரது மனைவி ஜெயந்தால்மணி என 4 பேரையும் அழைத்து கொண்டு ஒரு கல்யாணத்துக்கு காரில் சென்றார்... சாத்தான்குளம் அருகே முதலூரில் கல்யாணம் நிகழ்வு.. காரை வெள்ளையன்தான் ஓட்டிச் சென்றார்.
இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் என்ற 26 வயது டாக்டர், தன்னுடைய பாட்டி பெரியம்மாளை அழைத்து கொண்டு காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொடைரோடு அருகே சடையாண்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் 2 கார்களும் எதிரெதிரே அசுர வேகத்தில் வந்தன...
இதில் பிரகதீஷ், முன்னால் லாரியை ஓவர் செய்ய முயன்றார்... அப்போது கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓவர் ஸ்பீடில் வந்த பிரகதீஷ் சைக்கிள் மீது மோதினார். பிறகு கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தறிகெட்டு ஓடி, நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனை உடைத்து கொண்டு.. இன்னொரு பக்கத்தில் பாய்ந்து, எதிரே வந்த வெள்ளையனின் கார் மீது பயங்கரமாக மோதியது.



கொடைரோடு டோல்கேட்டில் நடந்த இந்த விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி உள்ளது.. பிரகதீஷ் மேல்தான் முழு தவறும் உள்ளதாக தெரிகிறது.. முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்ய போய்தான்.... சைக்கிளில் வந்தவர் மீது மோதிய காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.. இதில் 5 பேரும் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.



Saturday, January 25, 2020

#கரோனா வைரஸ் முதல் உலகப்போரின் அறிகுறியா???

உலக நாடுகளை தற்போது பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது கரோனா வைரஸ். தற்போது சீனா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து இந்த வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி பின்பு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு சுவாசக் காற்றின் வழியாக பரவுகிறது.



உலகப்போரின் அறிகுறியா?

இந்த வைரஸ்் 1917 ல் முதல் உலகப்போர்் காலகட்டத்தில் பரபரவி வந்த Spanish flu என்ற வைரஸிின் அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதன்் பரவும் வேகம் 1.4 முதல் 2.4 என்றற அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால்் சுமார 60 மில்லியன் மக்கள் இழக்கக்கூடும் என அறிவித்துள்ளனர்.

ஐநா வின் அமைப்பான WHO இதனைWorld health emergency ஆக அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது

#விஜய் 64 படத்தின் புதிய அப்டேட் குடியரசு தினத்தன்று

விஜயின் 64 ஆவது படம் மாஸ்டர். இப்படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் புதுமுக நடிகை மாளவிகா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜய்் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை XB புரொடக்ஷன்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே 2 ஃபர்ஸ்ட்் லுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மற்றுமொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குடியரசு தினத்தன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படத்தயாரிப்புு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



#Tnpsc அதிரடி நடவடிக்கை

அரசின் நடவடிக்கை என்ன???
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி 9,000 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


தேர்வாணையத்தால் டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அத் தேர்வாணையத்தால் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் முதல்் 40 இடங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வுவு எழுதியவர்கள் பெற்றனர்ள். இதனால் சந்தேகம் அடைந்தவர்ககள் புகார் கொடுத்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சிசி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணையில் இவர்க்கள் 40 பேரும் 2, 3 நாட்களில் அழியக்கூடிய பேனாவைை உபயோகித்ததும் அவர்களுக்குுுுுுு சில அரசு அதிகாரிகள் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இத் தேர்வாணையம் அவர்கள் 40 பேரும் இனி எந்த தமிழக அரசுு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள இயலாதவாறு வாழ்நாள் தடை விதித்துள்ளது. மேலும்    இதற்கு துணைபுரிந்த அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்துு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு;




சூர்யா படத்தில் வெறித்தனமான பாடல் #asurarai-potru

தற்சமயம் சூர்யா நடித்து வெளியாக உள்ள படம் சூரரை போற்று . இப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா என்னும் பெண் இயக்குனர் இயக்கியுள்ள குறிப்பிடத்தக்கது.






இவர் இயக்கிய இறுதி சுற்றுு படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போதுு அவர் இந்தியாவைச்் சேர்ந்த தொழிலதிபர் ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிகிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுுு வருவது குறிப்பிடத்தக்கது
.
இந்நிலையில் நேற்றுு அப்படத்திலிருந்து ஜி வி பிரகாஷ்் இசையமைப்பில பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. டீஸரில்் இடம்பெற்ற இப்பாடல் ரசிகர்கள் மத்தியிிில் பெரும் வரவேற்பை பெற்றது. மாறாா தொடங்கும் எனத் தொடங்கும் இப்பாடல் வெறித்தனத்தை உச்சியில்்க் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடிி வருகின்றனர்.







கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி ! ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்...